கடந்த நாட்களாக துரைராசா விருதினை பற்றி சமூகவலைத்தளங்களிலும் இணையதள செய்திகள் மூலமாகவும் பல வாழ்த்துச்செய்திகள் வலம் வந்துகொண்டிருந்தன. துரைராசா விருது பற்றி பேசுகின்றபோது எனக்கும் அதில் ஒருபங்கு ‘களிப்பு’ இருப்பதாகவே நான் இன்றும் உணர்கின்றேன். ஏன் எனில் எனக்கும் இன்றைக்கு ஒரு தசாப்தம் முன்னராக பீடங்களுக்கு இடையிலான மற்றும் பல்கலைக்கழக ரீதியிலான இரு துரைராஜா விருதுகளையும் பெற்ற பெருமை இருக்கிறது.

சரி, துரைராசா விருது என்றால் என்ன?
யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவாக ஒவ்வொரு வருடமும் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படுகின்ற விருதுகள் ஆகும். இது ஒவ்வொரு பீடத்திலும் சிறந்த செயற்பாடுகளை வெளிக்காட்டிய மாணவனோ அல்லது மாணவிக்கோ வழங்கப்படுவதுடன் பல்கலைக்கழக மட்டத்தில் அனைத்து செயற்பாடுகளிலும் சிறந்து செயலாற்றிய மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ (ஒருவருக்கு) வழங்கப்படுவதாகும். சிறந்த செயற்பாடுகள் எனும்போது அவை ஐந்து அம்சங்களை கொண்டது ஆகும் – கல்வி (GPA), விளையாட்டு, பொதுநல சேவைகள் (உதாரணமாக, மாணவர் மன்றங்கள், விளையாட்டு சபை), கலாச்சார செயற்பாடுகள், ஆராய்ச்சிகள் அல்லது ஆராய்ச்சி-சார் கட்டுரைகள் என்பனவற்றினை உள்ளடக்குகின்றது [மூலம் – http://www.jfn.ac.lk/index.php/call-for-applications-professor-alagaiah-thurairajah-gold-medal/?fbclid=IwAR3tQ5-9V-5j1EgvWf2tFzga_otPVw1d8yxkiTtJFXemuzV1K4y3VTsnr-0%5D
விருதுக்கு விண்ணப்பித்த மாணவன் ஒருவன் இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு இரவு பதினோரு மணிபோல அழைப்பை எடுக்கிறான் “அண்ணா, நீ தான் சொல்லவேண்டும் இதுக்கு நான் என்ன செய்வதென்று”. நான் சொல்லிய ஒரே பதில் உனக்கு தெரிந்த தகவலை தா, நான் கணித்து சொல்கிறேன் ஏன் என்றால் நான்தான் 2013 ஆம் ஆண்டில் இறுதியாக துரைராசா விருதுக்கான விதிகளை எழுதியவன். எனக்கு இந்த பொறுப்பை இன்றையநாளின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களால் நியமிக்கப்பட்டு நான் அதை செவ்வனே செய்திருந்தேன். அது தான் எனக்கு தெரிந்தவரை கடந்த 10 ஆண்டுகளாக அமுலில் உள்ளது. அது இரகசியமாக இருக்கும் என்று கருதுவதால் அதை நான் இங்கு பகிர விரும்பவில்லை.
சரி இது இவ்வாறு இருக்க! இன்னும் சில நாட்களே பட்டமளிப்புக்காக இருக்க பல்கலைகழகத்தின் இந்த விருதுக்காக நியமிக்கப்பட்ட குழுவினர் இவ்வாறு முட்டாள் தனமாக இருப்பதும் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக கணித புலமைவாய்ந்த பேராசிரியர் இருப்பதும் பெரும் அவமானம் மட்டுமல்லாது ஏற்கனவே விருது என்று அறிவிக்கபட்ட மாணவனை ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாக்குதலாகும்.
எனக்கு இரண்டு மாணவர்களையும் நன்றாக தெரியும். நான் அவர்களுடன் அனைத்து பல்கலைகழக போட்டிகளுக்கு போய் உற்சாகமூடியதுடன் என்னால் இயன்ற ஆதரவை அவர்களுடய முதலாம் வருடம் முதல் வழங்கி இருக்கிறேன். நீங்கள் அவர்களை கேட்டால் புரியம் யார் உன்னை அதிகம் மைதானதுக்கு தடகளம்-சரி, ஹாக்கி-சரி (Hockey) அழைப்பது என்று. நான் அவர்களுடன் தோளுமையாகவே இன்றும் இருக்கின்றேன்.
ஆனால் பல்கலைக்கழகம் அவர்களை மிகுந்த மனஉளைச்சலுக்குள் உள்தள்ளியுள்ளது. இது மிகவும் வருந்ததக்கதாகும். அத்துடன் இந்த இருவரும் முள்ளிவாய்க்கால் மற்றும் இலுப்பைக்கடவை (மன்னார்) இடத்தை சேர்த்த மாணவர்கள். எனக்கு நன்றாக புரியும் அவர்கள் எப்படி ஒரு வாழ்க்கையை பார சுமந்து தங்களுடைய நான்கு வருட வாழ்க்கையை ‘துரைராசா விருது’காக குறிவைத்து சாதித்தவர்கள். நான் அவர்களை கீழே போக விடமாட்டேன். இதனால் தான் நான் இந்த மடலை எழுதுகிறேன்.
ஆனால் பல்கலைகழகத்தில் இது சார்பாக நடேந்தேறிய நாடகம் வேறு. இது பற்றி நான் நன்கு அறிவேன். எனக்கு ஒரு மாணவன் இரவு தொலைபேசி அழைப்பு எடுக்கும் போது என்மனம் 10 ஆண்டுகள் பின்னே போனது. ‘துரைராசா விருது’ பற்றி ஒரு அற்பமும் அறியாத முட்டாள்கள் தான் இதை கணிக்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன், உங்களுக்கு புரியாவிட்டால் வாய் விட்டு கேளுங்கள் புரிய வைக்கின்றேன். உங்களுக்கு ‘Outstanding Athlete’கும் ‘all-round Sportwo/man’கும் வித்தியாசம் தெரியாது – ஏன் எனில் உங்களுக்கு மைதானம் என்ற மண் வாசனை தெரியாதவர்கள்.
அது சரி, நீங்கள் ஏன் உடற்கல்வி அலகின் பணிப்பாளரை உங்கள் குழுவில் இணைப்பதில்லை? எனக்கு மாணவன் சொன்னான், :”நான் அண்ணா, அவரை (உடற்கல்வி அலகின் பணிப்பாளர்) கேட்டபோது அவர் சொன்னார் எங்களை அவர்கள் ஒன்றும் கேட்பதில்லை”. நீங்கள் விரிவுரையாளராக இருக்கலாம் ஆனால் கொஞ்சமாவது விளையாட்டு தெரிஞ்சிருக்கணும் இதுக்கு… அப்புறம்… நாங்கள் விளையாட்டு ஆலோசனை சபை தலைவர் எண்டு இருப்பவர்கள் என்ன பண்ணுவீர்கள் – உங்கள் பேராசிரியருக்கு புள்ளிகள் கிடைத்ததும் உங்கள் வேலை சரியா? – கேவலம் (இது இதுக்கு முதல் இருந்த விஞ்ஞான பீடகாரருக்கும் பொருந்தும்)
துணைவேந்தர். சற்கு அவர்களே, நீங்கள் உங்கள் இந்த விருதுக்கான குழு (Committee) பலமாக பேசினீர்கள் தானே… உங்களை நம்புங்கள்.. இவர்களை நீக்கி.. சரியானவர்களை போட்டு.. சரியான முடிவை சரியாய் தெரிவியுங்கள்… இன்னும் எனக்கு சந்தேகமே… உங்களுக்குமா புள்ளி புரியவில்லை…. புதிராகவே உள்ளது… உதவி வேண்டின் கேளுங்கள்….
தயவு செய்து மதிப்பிற்குரிய பேராசிரியர் துரைராசா அவர்களை இப்படி உங்களுடைய அறிவற்ற செயற்பாட்டால் கொச்சைபடுத்தாதீர்கள்! சிந்தித்து செயலாற்றுங்கள்!
மதிப்பிற்குரிய துணைவேந்தர், நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இரண்டு தடவைகள் விழுந்து (விழவைத்து) விட்டீர்கள்… உங்களை மட்டும் நம்புங்கள்…
நன்றி
வணக்கம்
உங்கள் பல்கலை முன்னாள் மாணவன்
சிகோ
